Skip to content

பெய்தல்

மழைகளையும் கரைக்கும்

மழை மிரட்டுகிறது

அப்பாவி முகங்கொண்ட படகுகள்

அலைபாயும் நீரோட்டதில்

சுழ்ன்று சுழன்று

ஒதுங்குகின்றன

உக்கிரமான தழுவலில்

முகிலும் வயலும்

கருமையும் பச்சையும்

சொட்டு சொட்டாய்க்

கரையும் அவலம்

ஏரிக்குள் எறிந்த

சடலங்கள் எதையோ

தேடித் துழாவுவது போல்

தனியாய். கும்பலாய்

அப்பாலும் இப்பாலும்

தாறுமாறாய் மிதக்கும்

சொந்த பந்தங்கள்…

நள்ளிரவுத் துயரங்களை

சிதறடிக்கும் பணியில்

கொட்டித் தீராத மழை

Published inஹைக்கூ